மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட பிரதமர் மோடி... டுவிட்டரில் வைரலாகும் போட்டோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பல்வேறு விவாதங்களுக்கு இடையே பிரதர் மோடி குட்டித் தூக்கம் போட்டதாக டுவிட்டரில் போட்டோ வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. நேற்று காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கிய உடன் லோக்சபாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மறைந்த உறுப்பினர்களுக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125வது பிறந்த நாள் போன்றவற்றை கவுரவிக்கும் வகையிலும் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், அரசியலமைப்பு சட்டம் குறித்தும், அம்பேத்கரை நினைவு கூர்ந்தும் பேசினார்.

Constitution Day: Narendra Modi sleep Parliament sets Twitter abuzz!

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைத்து பி.ஆர்.அம்பேத்கர் பல்வேறு அவமானங்களையும், தடைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய தேசத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடுநிலையான பார்வையை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் தன்னை பிறர் புறக்கணிப்பதாகவும், இழிவுபடுத்தியதாகவும் உணரவில்லை.

இக்கட்டான சூழலிலும் கூட நான் இந்தியாவிலேயே இருப்பேன். இந்திய கலாச்சாரம், மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாட்டை பலப்படுத்துவேன் என உறுதிபட தெரிவித்தார் என்று ராஜ்நாத் பேசினார். மேலும் மதசார்பின்னை பற்றி அவர் பேசியதற்கு பதிலடி தரும் வகையில் லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரியாக வாதங்களை எடுத்துரைத்தார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி சோர்வாக காணப்பட்டார். ஏனேனில் தொடர்ந்து வெளிநாட்டு பயணம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், மலேசியா சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற ஆசிய உச்சி மாநாடு, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் இந்தியா திரும்பிய கையோடு குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அதிலும் நேற்று கலந்துகொண்டார் இதன் காரணமாக அவர் சற்று அயர்ந்து தூங்கியிருக்கலாம் என பலரும் டுவிட் செய்துள்ளனர். அந்த வீடியோ, போட்டோ காட்சிகள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+