ஒடிசா வளங்களை தமிழக காண்ட்ராக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்களாம்.. சொல்வது பாஜகவின் ஸ்மிருதி இரானி!
புவனேஸ்வர்: ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் காண்ட்ராக்டர்களால் ஒடிசா அரசு நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களால் ஒடிசா மாநில கஜானா சூறையாடப்படுவதாகவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசி இருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆறு கட்டங்களாக 488 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 7வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது.
பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகள், ஹரியாணா மாநிலத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 சீட்கள், ஒடிசாவில் 6 தொகுதிகள், பஞ்சாப்பில் 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 சீட்கள், மேற்கு வங்கம் மாநிலத்தில் 9, சண்டிகரில் 1 தொகுதி என 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 4வது கட்டமாக அங்கு ஜூன் 1ஆம் தேதி 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருவதால் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒடிசாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒடிசாவில் ஆளும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியின் மீது எதிர்க்கட்சியான பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வி.கே.பாண்டியனுக்கு ஒடிசா அரசில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக கடுமையாக தாக்கிப் பேசி வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பாலசூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பூரி ஜெகநாதர் கோயிலின் கஜானா சாவி மாயமாகி இருப்பது பற்றியும், 5T தலைவர் வி.கே.பாண்டியன் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
ஸ்மிருதி இரானி பேசுகையில், "பிஜு ஜனதா தளம் ஆட்சி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழ் காண்ட்ராக்டர் மூலமாக இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜல்ஜீவன் மிஷன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய நிதிகளை ஒதுக்கினார். ஆனால் தமிழ்நாட்டின் காண்டிராக்டர்கள் அந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
இலவச வீட்டு மனைக்காக வழங்கப்பட்ட நிதியும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தமிழ்நாடு காண்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில வளங்களை கொள்ளையடிக்க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக காண்ட்ராக்டர்கள் இடைவிடாது வேலை செய்து வருகின்றனர்" என்றார்.
மேலும் பேசிய அவர், "பாஜக ஒடிசாவைச் சேர்ந்தவரை முதல்வர் ஆக்கும். ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்த உடன் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். குறிப்பாக கடவுள் விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். பூரி ஜெகநாதர் கோயிலின் கஜானா சாவி எப்படி மாயமானது? தமிழகத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ஏன் அதை மறைத்து வைத்துள்ளார்" எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலது கரமான வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் வகையில் தமிழர்கள் எப்படி ஒடிசாவை ஆளலாம் எனப் பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications