காதல் தகராறு: 2 பெண்களை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த கான்ஸ்டபிள்
ஜம்மு: உயர் அதிகாரியின் மனைவி மற்றும் மைத்துனியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸ் அலுவலர் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் சஞ்சய்குமார். இன்று அதிகாலை 12 மணியளவில், ரஜோரி மாவட்டத்திலுள்ள, சிறப்பு அதிகாரி சமன் லால் என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சஞ்சய்குமார், சமன்லால் மனைவி ஊர்மிள் குமாரி மற்றும் அவரது சகோதரி நிஷா குமாரி ஆகியோரை தனது கையில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
குண்டுகள் பாய்ந்து இருவரும் அதே இடத்தில் பலியாகினர். இதைத்தொடர்ந்து சஞ்சய்குமார் தன்னைத்தான் சுட்டுக்கொன்று ரத்த வெள்ளத்தில் சரிந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு பிற போலீசார் ஓடிவந்து பார்த்தபோது மூவரும் உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். நிஷா குமாரியை, சஞ்சய்குமார் காதலித்ததாகவும், ஆனால் நிஷா குமாரி இந்த இதை ஏற்கவில்லையென்றும் கூறப்படுகிறது. இக்காரணத்தால்தான் நிஷா குமாரி மற்றும் அவரது சகோதரியை கொன்ற சஞ்சய்குமார், போலீசில் சிக்கி தண்டனை அனுபவிக்காமல் இருப்பதற்காக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications