திடீர்னு வீடியோ கால்.. "சாப்பாடு தர்றாங்களாப்பா".. இறந்த மகனுடன் பேசிய அம்மா.. கண்ணீர் காட்சிகள்
இறந்த மகனுடன் பேசும் தாயின் கண்ணீர் காட்சிகள் வைரலாகின்றன
அகமதாபாத்: "மகனே, எப்படி இருக்கேப்பா.. உள்ளே நல்லா சாப்பாடு தர்றாங்களா? கவலைப்படாதே.. சீக்கிரமாய் குணமாகிவிடுவே" என்று ஒரு வயதான தாய் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்று செல்போனில் பேசுகிறார்.. ஆனால், அவர் யாரிடம் பேசுகிறாரோ, அந்த மகன் எப்போதோ கொரோனாவால் இறந்துவிட்டார்.. இப்படி ஒரு துயரம் சூழ்ந்துள்ளது குஜராத்தில்..!
உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வைரஸ்கள் நம்மை கவ்வி உள்ளது.. எத்தனையோ பேர் மாண்டு போயுள்ளனர்.. ஆனால், இந்த கொரோனாவை மட்டும் எதுவுமே செய்ய முடியவில்லை..
இது எந்த மாதிரியான வைரஸ் என்பதை கண்டுபிடித்து, ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே இன்னொரு அலை பரவி கொண்டிருக்கிறது. இதனால், உலகமே சிக்கி கொண்டு தவித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும், இன்றைய நிலவரப்படி 180,550 பேர் இந்த தொற்றால் இறந்திருக்கிறார்கள்.

உயிரிழப்பு
உயிரிழப்புகளால், ஏராளமானோர் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.. வயது வித்தியாசம் பாராமல் தொற்று எண்ணற்றவர்களை கொண்டு போய் கொண்டிருக்கிறது.. இப்படி பலர் மரணித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அந்த குடும்பத்தாரையும் கடுமையாகவே பாதித்துள்ளது.. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.

படுக்கை வசதி
அகமதாபாத் நகரில் சிவில் மருத்துவமனை உள்ளது.. இந்த ஆஸ்பத்திரியில்1200 படுக்கை வசதி உள்ளது... இதுபோக நிறைய பேர் அட்மிட் ஆகி உள்ளனர்.. இந்த ஆஸ்பத்திரி வாசலில் பூனம் சோலங்கி என்ற வயதான பெண் நின்று கொண்டே இருக்கிறார்.. அவர் கையில் ஒரு செல்போன் இருக்கிறது. அதில், தன் மகனுக்கு வீடியோ கால் பேசுகிறார்.

கண்ணீர்
"எப்படிப்பா இருக்கே.. உள்ளே நல்ல சாப்பாடு தர்றாங்களா? உனக்கு ஒன்னும் ஆகாது.. சீக்கிரமா குணமாயிடுவே.. கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்" என்று சொல்கிறார்.. இதை மட்டும்தான் சொல்கிறார்.. இதையே திரும்ப திரும்ப சொல்கிறார்.. காரணம், அந்த மகன் எப்போதோ இறந்துவிட்டார்.. இவரது மகன் அந்த ஆஸ்பத்திரியில் தான் கொரோனா ட்ரீட்மென்ட்டில் இருந்துள்ளார்.. ஒரு வாரம் சிகிச்சையும் தந்துள்ளனர்.. ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.. மகன் இறந்துவிட்டது அந்த அம்மாவுக்கு தெரியும்... ஆனாலும், அவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

வீடியோ கால்
திடீர் திடீரென ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்று கொள்கிறார். உடனே வீடியோ கால் பேசுகிறார்.. அதாவது கடைசியாக மகனிடம் என்ன சொன்னாரோ, அதையேதான் திரும்ப திரும்ப சொல்கிறார்.. குடும்பத்தினர் யாராலும் இவரை தேற்ற முடியவில்லை.. இவர் மட்டுமில்லை.. 18 வயது பெண் ஒருவரும் இதேபோல ஆஸ்பத்திரிக்கு வந்து அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருக்கிறார்..

நம்பிக்கை
ஆனால், இவர் அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிறது.. அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்தவரும் இந்த பெண்தான்.. ஆனாலும், அப்பா இறந்ததாக அவரால் ஏற்கவே முடியவில்லை.. அதாவது மன ரீதியாக இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தனக்கு மிகவும் பிடித்தவர், இறக்க மாட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் தங்களிடம் திரும்பி வந்துவிடுவார்கள் என்று இவர்கள் ஆழமாக நம்புகிறார்களாம்..

தொற்று
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், ஒருவர் இறந்துவிட்டால், அவர்களின் முகத்தை கடைசியாக குடும்பத்தினர் பார்த்து கொள்வது வழக்கம்.. ஆனால், இந்த பாழாய் போன கொரோனாவால் அந்த குடுப்பினை கூட இல்லை.. தொற்று காரணமாக இறந்துவிட்டால், முகத்தை பார்க்க பல சமயங்களில் அனுமதியும் கிடைப்பதில்லை.. இதுவும் மன ரீதியாக இவர்களுக்கு பாதிப்பை தருகிறது. இப்படி இறந்து போனவர்களை நினைத்து பல இதயங்கள் தவியாய் தவித்து கொண்டிருக்கின்றன, ஒரு தெளிவும் அறியாமல்... ஒரு முடிவும் அறியாமல்...!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications