"கடவுள் இருக்கார்.. மாஸ்க் போடாதீங்க" கேலி செய்த இளைஞருக்கு கொரோனா.. மாஸ்க் அணிந்து உருக்கமான வீடியோ

Subscribe to Oneindia Tamil

போபால்: "கடவுள் இருக்கார்.. மாஸ்க் ஏன் போடறீங்க.. கடவுள் மேல் நம்பிக்கை வைத்து அதை கழற்றி தூர எறியுங்கள்" என்று டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட சமீர்கான் என்ற இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதையடுத்து, மாஸ்க் அணிந்தபடி 'எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று சமீர் கான் மீண்டும் ஒரு டிக்டாக் வீடியோ பதிவிட்டுள்ளார்!!

Recommended Video

    மாஸ்க் போடாதீங்க' கேலி செய்த இளைஞருக்கு கொரோனா

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர்.. இவர் பெயர் சமீர் கான்.. சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

    அதில், "ஏன் எல்லோரும் மாஸ்க் போடறீங்க? கடவுள் இருக்கிறார்.. அதை முதலில் கழற்றி தூக்கி எறிந்து விட்டு கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள்" என்று மாஸ்க் அணிவதை கேலி செய்யும் விதத்தில் அந்த வீடியோ பதிவிட்டிருந்தார்.

    அறிகுறி

    அறிகுறி

    இந்நிலையில் சமீர் கான் திடீரென காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டார்.. அதனால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் அவரை தனிமைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆஸ்பத்திரி சென்றும் சமீர் கான் அடங்கவில்லை.

    வீடியோ

    வீடியோ

    தான் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் இடம் தொடர்பாக திரும்பவும் ஒரு டிக்டாக் வீடியோ பதிவிட்டார். ஆனால் அந்த வீடியோவில் சமீர் கான் மாஸ்க் அணிந்திருந்தார். அப்போது, "எனக்காக கடவுளை வேண்டி கொள்ளுங்கள்" என்று ஒரு வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

    பறிமுதல்

    பறிமுதல்

    ஆஸ்பத்திரிக்கு உள்ளிருந்தே சமீர் கான் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சமாச்சாரம் அங்கிருந்த டாக்டர்களுக்கு தெரியவந்தது. அதனால் உடனடியாக அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்... அப்போதுதான் ஏராளமான டிக்டாக் வீடியோக்களை அதில் அவர் தயார் செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது.இந்த சமயத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்ட்களின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீரான உடல்நிலை

    சீரான உடல்நிலை

    இதை பற்றி டாக்டர்கள் சொல்லும்போது,"சமீர்கான் உடல்நிலை சீராக இருக்கிறது.. அவர் எந்த ஊருக்கும் செல்லவில்லை.. ஆனாலும் தொற்று ஏற்பட்டுள்ளது... ஆஸ்பத்திரியில் உள்ள தகவல்களை அவர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ததால், அந்த செல்போனை பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர். மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதற்காகவே இவரது இந்த டிக்டாக் வீடியோ ஷேர் செய்யப்பட்டு வருகிறது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+