324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை!
Recommended Video
சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

என்ன எப்படி
இந்த நிலையில் சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். நேற்று இரவு வுஹன் சென்று விமானம் இன்று காலை டெல்லி வந்தது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 15 இந்திய அதிகாரிகள் சென்றனர்.

பயணிகள் யார்
பயணிகள் சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லா பயணிகளும் கடும் சோதனைக்கு பின்பே விமானத்தில் ஏற்றப்பட்டனர். நோய் தாக்குதல் இல்லாதவர்கள்தான் முதலில் இந்தியா கொண்டு வரப்பட்டனர். வுஹன் நகரத்திற்கு உலக நாடுகள் எல்லாம் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியா மட்டும்தான் விமான போக்குவரத்தை இந்த மீட்பு பணிக்காக மேற்கொண்டுள்ளது..

முக்கிய முடிவு
இதை மிகவும் முக்கியமான முடிவு என்று கூறுகிறார்கள். இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 14 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 14 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

யார் எல்லாம்
இவர்களுக்கு வைரஸ் ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை என்பது உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் , தூதரக அதிகாரிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.. ஒரு நோய் தாக்குதல் உள்ளாகி உள்ள வுஹன் நகரத்திற்கு இந்திய விமானம் சென்று வந்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications