2 வருடத்திலேயே இதுதான் மிக அதிகம்.. தென் கொரியாவில் ஒரே நாளில் பல லட்சம் கொரோனா கேஸ்கள்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சியோல்: சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் ஒரே நாளில் மிக அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. ஸ்டெல்த் ஓமிக்ரான் காரணமாக அங்கு இவ்வளவு கேஸ்கள் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீனாவில் தினசரி கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 1369 கேஸ்கள் பதிவானது. அங்கு இருக்கும் வடகிழக்கு மாகாணமான சாங்சுன் பகுதியில் இந்த கேஸ்கள் பதிவானது. இதனால் மொத்தமாக சாங்சுன் மாகாணம் லாக்டவுன் செய்யப்பட்டது.

9 மில்லியன் மக்கள் வசிக்கும் மாகாணத்தை சீனா மொத்தமாக லாக் செய்தது. மக்கள் யாரும் வெளியே வர கூடாது. குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது.

எத்தனை கேஸ்கள்

எத்தனை கேஸ்கள்

கடந்த திங்கள் கிழமை அங்கு 5500 கேஸ்கள் பதிவானது. அதன்பின் தினமும் 3500க்கும் அதிகமாக அங்கு கேஸ்கள் பதிவாகி வருகிறது. சீனாவில் கொரோனாவிற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. zero tolerance எனப்படும் கடுமையான லாக்டவுன் விதிகளை சீனா போட்டு இருந்தும் கூட அங்கு இத்தனை ஆயிரம் கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு கொரோனா கேஸ்கள் உயர்வதற்கு பின் ஸ்டெல்த் ஓமிக்ரான் வகை கொரோனா காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 தென் கொரியா

தென் கொரியா

இந்த நிலையில்தான் சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் ஒரே நாளில் மிக அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. அங்கு ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,00,741 கேஸ்கள் அங்கு பதிவாகி உள்ளது. கடந்த 2 வருடங்களில் தென் கொரியாவில் கொரோனா பரவ தொடங்கிய பின் அங்கு பதிவான மிக அதிக கேஸ்கள் இதுதான்.

 எத்தனை கேஸ்கள்

எத்தனை கேஸ்கள்

அங்கு இதுவரை 7,629,275 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 11,052 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தற்போது ஆக்டிவ் கேஸ்களாக 8 லட்சம் பேர் இருக்கிறார்கள். இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெல்த் ஓமிக்ரான் காரணமாக அங்கு இவ்வளவு கேஸ்கள் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 ஸ்டெல்த் ஓமிக்ரான்

ஸ்டெல்த் ஓமிக்ரான்

இது கொரோனா வைரஸின் உட்பிரிவு ஆகும். ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது. அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் BA.1தான் முன்னர் பரவி வந்தது. BA.1 வகை ஓமிக்ரான்தான் முதலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது. ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். ஓமிக்ரான் BA.1 மற்றும் BA.2 இரண்டுக்கும் ஒரே மாதிரியான 32 ஸ்டிரெயின் உள்ளது. ஆனால் BA.1 வகை ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்காது.

வேகமாக பரவும்

வேகமாக பரவும்

இதனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் எஸ் ஜீன் இல்லை என்றால் அதை ஓமிக்ரான் என்று கூறிவிடலாம். ஆனால் BA.2 வகை ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்கும். இதனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் ஓமிக்ரான் தான் தாக்கி உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியாது. இப்படி ஆர்டிபிஆர் சோதனையில் BA.2 வகை ஓமிக்ரானை உறுதி செய்ய முடியாது என்பதால்.. இதற்கு ஸ்டெல்த் ஓமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+