"அய்யோ".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

வேனில் இருந்து திடீரென சடலம் ஒன்று கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

போபால்: ஆம்புலன்ஸ் ஒன்று ரோட்டில் ஓடிக் கொண்டே இருக்கிறது.. அப்போது திடீரென ஒரு சடலம் தொப்பென்று வேனில் இருந்து கீழே விழுகிறது.. இதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடுகிறார்கள்.. இந்த சம்பவம் நம் தாய்நாட்டில் தான் நடந்துள்ளது..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை பெருகி வருகிறது.. தினமும் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.,. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் செத்து மடிகிறார்கள்.

மத்திய அரசு என்னென்னவோ செய்து பார்த்தும் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.. மாநில அரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு ஆஸ்பத்திரிகளில் இடமில்லை.. ஆஸ்பத்திரிக்கு வெளியே உயிர்களை கையில் பிடித்துள்ளனர்..

பிணக்குவியல்

பிணக்குவியல்

உயிர் பிழைக்க ஆக்சிஜன் இல்லை.. தொற்றை தடுத்துக் கொள்ள தடுப்பூசிகள் இல்லை.. கடைசியில் இவர்கள் இறந்துவிட்டால் சுடுகாடும் இல்லை. அப்படி அப்படியே பெரிய மைதானங்களில் பிணங்களை வரிசையாக கிடத்தி போட்டு எரித்து வருகிறார்கள்.. பிணக்குவியல்கள் ஆங்காங்கே எரிந்து கொண்டிருக்கின்றன..

வீடியோ

அந்த வகையில், வடமாநிலங்களில் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது.. குஜராத், உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் மாநிலங்களில் சடலங்கள் எரிப்பதற்காக ரெடியாக வைக்கப்பட்டிருக்கின்றன.. இது சம்பந்தமான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன... இந்த நேரத்தில் இன்னொரு கொடுமையும் நிகழ்ந்துள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் விடிசா என்ற பகுதியில் கொரோனா தொற்றால் பலர் பலியாகி உள்ளனர்.

சுடுகாடு

சுடுகாடு

இந்த சடலங்களை உறவினர்களிடமும் தர முடியாது என்பதால், ஆஸ்பத்திரி நிர்வாகமே இவர்களை எரிப்பதற்காக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முனைகிறது.. அந்த வகையில், இன்று காலை, வழக்கம் போல அந்த சடலங்களை குவித்து வைத்து கொண்டு, அந்த ஆஸ்பத்திரியை விட்டு, ஆம்புலன்சில் வெளியே வருகிறது.. அப்போது திடீரென ஆம்புலன்ஸின் பக்கவாட்டு கதவு டமார் என திறந்து கொள்கிறது..

வீடியோ

வீடியோ

அதில் இருந்து ஒரு சடலம் நடுரோட்டில் பொத்தென்று விழுகிறது.. திடீரென ஒரு சடலம் கீழே விழுந்ததை பார்த்ததும், பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து டிரைவர் இறங்கி வந்து, அந்த சடலத்தை எடுத்து மறுபடியும் ஆம்புலன்ஸில் தூக்கி போட்டுக் கொண்டு போகிறார்.. இந்த வீடியோவை பார்த்து மக்கள் பதறி போய் உள்ளனர்.. நமக்கா இந்த நிலைமை? என்னவென்று சொல்வது? யாரை குத்தம் சொல்வது?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+