ஜூலை 19ம் தேதி வரை.. கோவாவில் ஒரு வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிப்பு.. கூடுதல் தளர்வுகளும் அறிவிப்பு
கோவாவில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவா: தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையாத நிலையில், கோவாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்து உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.. குறிப்பாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்தது..
ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த 26 கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் துடிதுடித்து உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இது அம்மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தி இருந்தது.

சுகாதார துறை
இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் கோவாவின் சுகாதாரத்துறை இறங்கியது.. பல்வேறு கட்டுப்பாடுகளை லாக்டவுன் அறிவிப்புடன் சேர்த்து அரசு வெளியிட்டது.. இப்போது, நேற்று நிலவரப்படி, அங்கு புதிதாக 131 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. எனினும், கோவாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,68,716 ஆக உயர்ந்துள்ளது...

உயிரிழப்பு
நேற்று 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் நேற்று ஒரே நாளில் 241 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,63,771 ஆக அதிகரித்துள்ளது. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இப்போதைக்கு 1,848 பேர் சிகிச்சையில்தான் உள்ளனர்.

அறிவிப்பு
இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அதேசமயம், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் வெளியாகி உள்ளது.. அதன்படி, விளையாட்டு வளாகங்கள் ரசிகர்கள் இன்றி திறக்கலாம் என்றும், மதவழிபாட்டு தலங்களில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது..

தளர்வுகள்
அதேபோல, உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது... ஆனால், கேசினோக்கள், சினிமா தியேட்டர்கள், ஸ்கூல்கள், கல்லூரிகள், வாராந்திர சந்தைகள் போன்றவைளை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது... வரும் 19-ம் தேதி காலை 7 மணி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications