சூரத்தில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டனர்
சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகளில் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவடைகிறது.

அதேநேரத்தில் ஒரு மாத காலமாக பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் துயரங்களுக்குள்ளாகி வருகின்றனர். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க கோரி குஜராத்தின் சூரத், தெலுங்கானாவின் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
அத்துடன் மாநில அரசுகளும் பிற மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதனடிப்படையில் சூரத்தில் இருந்து ஒடிஷா, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இதற்கான சிறப்பு பாஸ்களும் வழங்கப்பட்டன. இதனிடையே மேலும் நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு அடிப்படை வசதி கோரி சூரத் நகரில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ராஜஸ்தானின் கோட்டா
இதனிடையே ராஜஸ்தானின் கோட்டா நகரில் படித்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் 2,000 மாணவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் ராய்ப்பூர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ராய்ப்பூரில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications