சாப்பிட எதுவும் இல்லை.. விஷ பாம்பை கொன்று.. வாழை இலையில் படையல் போட்ட மக்கள்.. ஷாக்!
அருணாசல பிரதேசத்தில் ராஜ நாகத்தை கொன்று சாப்பிட்டுள்ளனர்
இட்டாநகர்: சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் அருணாச்சல பிரதேச மக்கள் கொடிய விஷ பாம்புகளை பிடித்து கொன்று சாப்பிட துவங்கியுள்ளனர். ஊரடங்கினால் இந்த கொடுமை நடந்துள்ளது!!
Recommended Video
இணையத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.. அருணாச்சல பிரதேச காடுகளில் ஒரு வேட்டை குழு உள்ளே நுழைந்து காட்டு விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறது.. அதில் சுமார் 12 அடி நீளமுள்ள கிங் கோப்ராவும் வேட்டையாடப்படுகிறது.

இந்த விஷப்பாம்பினை கொன்று, அதனை உணவாக சாப்பிடும் வீடியோவை இந்த குழுவினரே இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்... மொத்தம் 3 ஆண்கள் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வெட்டுவதற்கு முன்பு தோளின் மீது போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள்.
அந்த பாம்பைதான் விருந்து வைத்து சாப்பிட போகிறார்கள்.. அதற்காக அதை முதலில் துண்டு துண்டாக நறுக்குகிறார்கள்.. பிறகு சுத்தம் செய்வதற்காக வாழை இலைகளில் அந்த நறுக்கிய துண்டுகளை போட்டு சமைத்து சாப்பிடுகிறார்.
பல நாட்களாக ஊரடங்கு உள்ளதால் இவர்களின் வீடுகளில் மளிகை சாமான் பொருட்களும் இல்லை.. அதனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, "சாப்பிட எதுவுமே இல்லை.. அரிசியும் இல்லாததால்தான், காட்டிலாவது ஏதாவது கிடைக்குமா என்று வந்தோம்.. ஒரு விஷ பாம்புதான் கிடைச்சது" என்றார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு அவர்கள் மீது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... காரணம், ஊர்வனவற்றை கொல்லக் கூடாது என்கிறது சட்டம்.. அதுவும் கிங் கோப்ராவை கொல்வது ஜாமீனில் வெளிவர முடியாத ஒரு குற்றமாம்.. அதனால் இந்த விவகாரம் சீரியஸ் ஆகி உள்ளது.
எனினும் அருணாச்சல பிரதேசத்தில் ஏராளமான ஆபத்தான பாம்பு இனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.. அதனால்தான், பொதுமக்கள் உணவு தேடி படையெடுக்கவும் துவங்கியுள்ளனர்!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications