10 நிமிடம் பேசிய பிரதமர்.. உங்களுக்கு உதவியாக இருப்போம்.. ஜி ஜிங்பிங்கிற்கு போன் செய்த மோடி!
சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு போன் செய்த பிரதமர் மோடி, சீனாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
டெல்லி: சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு போன் செய்த பிரதமர் மோடி, சீனாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 811 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 37141 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

இந்தியா எப்படி
இந்தியாவில் ஏற்கனவே மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் மூன்று பேர் இந்த வைரஸ் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து இந்தியர்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதற் கட்டமாக கடந்த வாரம் 324 இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

மறுநாள் மீண்டும்
அதற்கு மறுநாள் மீண்டும் அடுத்த கட்டமாக 325 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் எல்லோரும் தற்போது திபெத் எல்லையில் இருக்கும் மத்திய அரசு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட உள்ளனர். அங்கு அவர்கள் தனியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சீன அதிபர்
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு போன் செய்த பிரதமர் மோடி கொரோனா வைரஸ் குறித்து பேசினார். அதில், இந்தியர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வர உதவியதற்கு நன்றி. உங்களின் உதவி மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் வைரஸ் மூலம் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.

உங்கள் கஷ்டம்
உங்களின் கஷ்டத்தோடு இந்தியா உடன் இருக்கிறது. சீனாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயார். உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இரண்டு தலைவர்களும் சுமார் 10 நிமிடம் இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்டு உறவில் இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் கூறுகிறார்கள்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications