பொண்ணு செம வெயிட் போல.. அலேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே!

மணமக்கள் மேடையிலேயே குப்புற விழுந்து உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மாப்பிள்ளைக்கு எதுக்கு இந்த ஆசைன்னு தெரியல.. பொண்ணு செம "வெயிட்" போல.. ஆசையாக அலேக்காக தூக்க போய்.. கடைசியில் ரெண்டு பேருமே மணமேடையிலேயே குப்புற விழுந்து பல்பு வாங்கி விட்டனர்.

மேற்கு வங்கத்தில் ஒரு கல்யாணம் நடந்துள்ளது. இந்த கல்யாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Couple fell down on Marriage state Video viral

இந்துமுறைப்படி கல்யாணம் நடக்க.. உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ உள்ளனர். அப்பதான் மாப்பிள்ளை தாலி கட்டி முடிச்சிருப்பார் போல தெரிகிறது! கல்யாண பெண்ணை தூக்கி ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்டுள்ளார்.

அதற்காக அங்கேயே மணமேடையிலேயே பெண்ணை தூக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் தூக்க முடியவில்லை. காரணம்.. பெண் கொஞ்சம் வெயிட் போல தெரிகிறது.

தூக்காமலும் அப்படியே விட்டு விட்டால் தனக்கு மாப்பிள்ளை கெத்து போய்விடும் என்று நினைத்து, கஷ்டப்பட்டுத் பெண்ணை தூக்குகிறார். அந்த பெண்ணும் தன் உடல் எடை தெரிந்தும் தூக்க வேணாம் என்றும் சொல்லவில்லை. ஒருவேளை புதுப்பெண் என்பதால் வெட்கமாக இருந்திருக்கலாம்!

சிரமப்பட்டு.. கஷ்டப்பட்டு.. மாப்பிள்ளை தூக்குவதை பார்த்து கம்மென்றே நிற்கிறார். கடைசியில் பெண்ணை ஒருவழியாக தூக்கிவிட்டார் மாப்பிள்ளை... ஆனால் என்ன பிரயோஜனம்.. அடுத்த செகண்டே ரெண்டு பேரும் தொப்பென மணமேடையியே குப்புற கவிழ்ந்துவிழுந்துவிட்டனர்.

இதை அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். மாப்பிள்ளை பெண்ணை சரியாக தூக்காமல், அந்த பெண்ணையும் கீழே தள்ளி, தானும் குப்புற விழுந்த இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+