கணவர் மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டால் அது பலாத்காரம் அல்ல: டெல்லி கோர்ட்
டெல்லி: கணவர் மனைவியுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளம்பெண் ஒருவர் தென்மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது,
விகாஷ் என்பவர் எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். மயக்க நிலையில் இருந்த எனக்கும், அவருக்கும் திருமணம் நடந்ததாக பதிவு செய்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு என்னை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
மார்ச் மாதம் 4ம் தேதி விகாஷ் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து காசியாபாத் அழைத்துச் சென்றதற்கான ஆதாரம் இல்லை. கணவன் மனைவியிடம் வலுக்கட்டாயமாக உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று தெரிவித்தது.
இந்த வழக்கில் இருந்து விகாஷ் விடுவிக்கப்பட்டார். இது குறித்து விகாஷ் கூறுகையில், நான் அவரை 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி திருமணம் செய்தேன். எனது மனைவியின் வலியுறுத்தலின்பேரில் தான் திருமணத்தை பதிவு செய்ய காசியாபாத் நீதிமன்றத்திற்கு சென்றோம். எனது சகோதரியின் வீட்டை என் பெயரில் மாற்ற முடியாததால் என் மனைவி என் மீது வேண்டும் என்றே குற்றம்சாட்டியுள்ளார் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications