மாமனார் மரணம்..மருமகனுக்கு கல்யாணம்! பில்கிஸ் பானு குற்றவாளிகளுக்கு இஷ்டத்திற்கு வழங்கப்படும் பரோல்
காந்திநகர்: நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதில் ஒரு குற்றவாளிக்கு, அவருடைய மருமகனின் திருமணத்தில் பங்கேற்க 10 நாள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2002ம் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். நல்வாய்ப்பாக பில்கிஸ் பானு உயிர்பிழைத்த நிலையில், அவர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் பேரில், 11 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கு ஆயுள் தண்டனையையும் வழங்கியது.

ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட மூவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் 11 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், “பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்றும் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.
இப்படி இருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். அதேபோல தற்போது சந்தனா எனும் குற்றவாளி, தனது மருமகனின் திருமணத்திற்காக 10 நாட்கள் பரோலில் வெளியே வந்திருக்கிறார். இவரது பரோல் கோரிக்கையை விசாரித்த நீதிபதி திவ்யேஷ் ஏ ஜோஷியின் தலைமையிலான அமர்வு, பரோலுக்குக்கு அனுமதியளித்தது.
நாட்டையே உலுக்கிய பாலியல் குற்றவாளிகள், தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்யப்படுவதும், அவர்களுக்கு எளிதாக பரோல்கள் வழங்கப்படுவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications