ஜெ. வழக்கில் 'கண்ணை மூடிக் கொண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு': குல்தீப் நய்யார் விமர்சனம்
டெல்லி: நமது நாட்டின் நீதித்துறை பணக்காரர்களுக்காக, செல்வாக்குமிக்கவர்களுக்காக எப்படியெல்லாம் வளைகிறது என்பதை சல்மான்கான் மற்றும் ஜெயலலிதா வழக்குகளை சுட்டிக்காட்டி மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நாயர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி கண்ணை மூடிக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் எனவும் சாடியிருக்கிறார் குல்தீப் நாயர்.
அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் குல்தீப் நாயர் எழுதிய கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளதன் சுருக்கம்:

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட போது எந்த ஒரு காரணமும் இல்லாமல் நான் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன்.. எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத தொழில்முறை பத்திரிகயாளனாக இருந்த போதும் தடுத்து வைக்கப்பட்டேன். அப்போது என்னை நீதிபதிகள் ரங்கராஜன், அகர்வால் ஆகியோர் விடுவித்தனர். பத்திரிகை சுதந்திரத்தை மதித்த அந்த இரு நீதிபதிகளும் தண்டிக்கப்பட்டனர். மூத்த நீதிபதி ரங்கராஜன், சிக்கிம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். ஆர்.என். அகர்வால் அமர்வு நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
அண்மையில் சல்மான்கான் மற்றும் ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளின் போக்கைப் பார்க்கும் போது பணமோ அல்லது செல்வாக்கு எவ்வளவு தூரம் வேலை செய்திருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.
குடிபோதையில் கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய சல்மான்கானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.. அவர் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடே செய்யாத போதே.. ஒருநிமிடம் கூட அவர் சிறைவாசத்தை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே உடனடியாக அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டின் சாமானிய குடிமகன் ஒருவனுக்கு கிடைத்துவிடுமா என்ன? ஒரு குற்றச் செயலை குற்றமாகப் பார்ப்பதைவிட்டுவிட்டு அதை செய்தவர் வி.ஐ.பி.யா எனப் பார்த்து தீர்ப்பளிக்கப்படுகிறது.
ஜெயலலிதா வழக்கில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ34.76 கோடி என்கிறார்.. இதில் ரூ13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தால் அது போக எஞ்சிய சொத்து மதிப்பு ரூ21.26 கோடி.
ஆனால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ37.59 என்கிறார் நீதிபதி. ஆகையால் சொத்து மதிப்பு வித்தியாசம் என்பது ரூ16.32 கோடி. ஆனால் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதியோ இந்த வித்தியாசம் ரூ2.82 கோடிதான்; அதாவது ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக 8.12%தான்.. அதனால் அவரை விடுதலை செய்வதாக கூறுகிறார்...
ஆனால் அரசு சிறப்பு வழக்கறிஞரோ சொத்து மதிப்பு வித்தியாசம் ரூ16.32 எனில் வருமானத்தை விட 76% அதிகம் என்கிறார்.. வெளிப்படையாகவே தெரியும் நீதிபதியின் இத்தகைய தவறுகளை எங்கே போய் சரிசெய்வது?
ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்கின் தீர்ப்புகளானது நாட்டை நிலைகுலையச் செய்யக் கூடியதுதான்..
இவ்வாறு குல்தீப் நாயர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications