உடம்பெல்லாம்.. மாட்டு சானம் பூசிக் கொண்டால் தொற்றை சரி செய்யலாமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
உடம்பில் மாட்டு சாணத்தை பூசினால் கொரோனா மறையாது என்கிறார்கள்
காந்திநகர்: கொரோனாவை விரட்ட, உடம்பெல்லாம் மாட்டு சாணத்தை பூசிக் கொண்டு, யோகா செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆனால், இது ஒரு போலி தகவல் என்று தெரியவந்துள்ளது.
Recommended Video
கடந்த ஓரிரு வருடங்களாகவே மாட்டு சாணம், மாட்டு கோமியம் குறித்த செய்திகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் இவையெல்லாம் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது..

இந்நிலையில், குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒரு வைரலானது.. அந்த வீடியோவில் உடம்பு முழுக்க மாட்டு சானத்தை பூசிக் கொண்டு சிலர் நின்று கொண்டிருக்கின்றனர்.. இப்படி செய்தால், தொற்றினை ஓட்டிவிடலாம் என்ற பதிவும் அதில் காணப்பட்டது.
கவுதம் மணிலால் என்ற மருந்து கம்பெனி ஊழியர்,"மாட்டு சாணத்தை இப்படி உடம்பெல்லம் பூசிக்கொண்டதால்தான், கடந்த வருடம் தனக்கு வந்த கொரோனா ஓடியே போச்சு.. அதனால் என்னை தேடி நிறைய டாக்டர்களே இங்கு வந்து போகிறார்கள்.. இப்படி செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும்" என்கிறார்.
அதுமட்டுமல்ல, ஆமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் மாட்டு சாணத்துடன், கோமியத்தை கலந்து உடலில் பூசி கொள்கிறார்கள்.. அதன்பிறகு யோகா பயிற்சி செய்கிறார்கள்.. அதன்பிறகு பால் அல்லது மோர் கொண்டு உடலை கழுவி கொள்கிறார்கள்.. இப்படி செய்தாலும் தொற்றை சரி செய்யலாம்" என்றும் கூறப்படுகிறது.. ஆனால், இந்த தகவல் எதுவுமே இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதே டாக்டர்கள் சொல்லும் உண்மை.
மாட்டு சானத்தை உடலில் பூசிக் கொண்டால் கொரோனா தொற்று சரியாகும் என்பதில் துளி கூட உண்மை கிடையாது,.. இப்படியெல்லாம் செய்தால், உடலில் பக்கவிளைவுகள்தான் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், தேவையில்லாமல் இதுபோன்ற ஆபத்தான நேரங்களில் போலி செய்திகளை பரப்ப வேண்டாம், என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்


Click it and Unblock the Notifications
