மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நன்மையே இல்லை: யெச்சூரி தாக்கு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு கிடைத்த பலன் என்ன? நிச்சயம் உறுதியான நன்மை எதுவும் கிடைக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 நாள் தேசிய மாநாடு, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான வரும் 19-ந் தேதி உட்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மாநாட்டில் கட்சி வெளியிடவுள்ள தீர்மானங்கள் குறித்து சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்த வரையில், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட, மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி மேற்கொள்கிறார்.
இதன் மூலம் நாட்டு நலனுக்கு அவர் கொண்டு வரப் போவது என்ன? இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், உறுதியான நன்மை எதுவும் கிடைக்கப் போவதில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கை கவலையளிக்கிறது. ஏனெனில், அவை அமெரிக்க நலன் சார்ந்தவையாக உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை அல்ல.
இவ்வாறு யெச்சூரி கூறினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications