கோவை அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல்... உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
இடிகரை: கோவை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரிய விபத்தில் இருந்து தப்பியது.
கோவை அருகே உள்ள ராக்கிபாளையம் வினாயகர் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நேற்று இரவு 7 மணிக்கு வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை பார்த்தார். இது குறித்து உடனடியாக அருகில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்து விரைந்து வந்த போலீசார் மேட்டுப்பாளையம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 6 பேர் அடங்கிய ரெயில்வே ஊழியர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் விரிசல் அடைந்த தண்டவாளத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். விரிசல் அடைந்த தண்டவாளத்தின் பகுதியில் உள்ள பக்கவாட்டில் இரும்பு ராடுகளை வைத்து பொருத்தினர். இந்த பணி சுமார் 1 மணிநேரம் நீடித்தது.
இதற்கிடையில் நேற்று மாலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சீரமைப்பு பணி நடப்பதை அறிந்து, அந்த ரெயில் காரமடையில் நிறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தற்காலிகமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டவுடன் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.
இது குறித்து ரெயில்வே என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:
தொடர் மழை காரணமாக தண்டவாளம் கீழ் பகுதியில் இறங்கி, விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த தண்டவாளத்தை மாற்றுவது உடனே முடியாத காரியம் என்பதால், விரிசல் அடைந்த பகுதியில், ராடுகள் வைத்து பொருத்தப்பட்டு,தற்காலிகமாக ரெயில்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து நிரந்தர சீரமைப்பு பணி இன்று நடக்கிறது. மேலும் உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications