இவருமா இப்படி.. அரசியலில் அம்பத்தி ராயுடு என்ட்ரியாம்.. எந்த கட்சி தெரியுமா?
ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமாக விளங்கிய அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரருமாக விளங்கிய அம்பத்தி ராயுடு நடப்பு ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சூட்டோடு சூடாக அரசியல் களத்தில் கால் பதிக்க அம்பத்தி ராயுடு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு அண்மையில் இருமுறை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அது மட்டும் இன்றி ஜெகன் மோகன் ரெட்டியை புகழ்ந்தும் பேசியிருந்தார். இதனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் ராயுடு விரைவில் இணைய இருப்பதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
அம்பத்தி ராயுடு குண்டூர் அல்லது கிருஷ்ணா ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதை உறுதி செய்வதை ராயுடு அளித்த ஒரு பேட்டியும் மறைமுகாக உறுதி செய்யும் வகையில் இருந்தது. அதாவது அம்பத்தி ராயுடு அளித்த பேடியில், " அரசியலில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகவும் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துச்செல்வதாகவும் கூறியிருந்தார்.
எனவே, விரைவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவித்தாலும் பிற வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications