கேரளா.. பெண்ணை 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்த விவகாரத்தில் திருப்பம்.. காவல்துறை என்ட்ரி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்த சம்பவத்தை கேரள கிரைம் பிராஞ்ச் போலீஸ் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை அந்த சர்ச் பாதிரியார் மிரட்டி உறவு கொண்டதாக கூறப்பட்டது.

பின்னர், அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து, அதை பிற சில பாதிரியார்களுக்கு அனுப்பியதாவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பாதிரியார்கள் மிரட்டலா

பாதிரியார்கள் மிரட்டலா

இதே தேவாலயத்தை சேர்ந்த மேலும் 3 பாதிரியார்களும், தும்பமோன் பகுதியிலுள்ள சர்ச் பாதிரியார் என மொத்தம் 5 பாதிரியார்களால் அந்த பெண் அடுத்தடுத்து மிரட்டி உறவு கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், தேவாலய நிர்வாகியுடன் உரையாடிய டெலிபோன் ஆடியோ வைரலானதால் இந்த விஷயம் அம்பலமானது.

பாவ மன்னிப்பு

பாவ மன்னிப்பு

திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டில் வசித்த மற்றொரு பாதிரியாருடன் அந்த பெண் உறவு வைத்திருந்ததாகவும், இதற்காக பாவ மன்னிப்பு கேட்க தேவாலயம் சென்றபோது, அந்த பாதிரியார் இதை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டி இந்த சம்பவங்களை அரங்கேற்றியதாகவும் விவரம் வெளியானது. இதனிடையே, 5 பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கிரைம் பிராஞ்ச்

கிரைம் பிராஞ்ச்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள கிரைம் பிராஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேவாலய நிர்வாகங்கள் மோதல்

தேவாலய நிர்வாகங்கள் மோதல்

சிரியன் ஜேகோபைட் என்ற மற்றொரு சர்ச் நிர்வாகத்துடன், மலங்கரை சர்ச் நிர்வாகத்துக்கு நீண்ட கால தகராறு இருப்பதால் இது எதிர் சர்ச் கிளப்பிய பொய் குற்றச்சாட்டாக இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது. எனவே, போலீஸ் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+