இலவசங்கள் எனும் குறுக்கு வழி அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்.. பிரதமர் மோடி அட்டாக்
ராஞ்சி : குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக ஜார்கண்ட் வந்த பிரதமர், சாலை மார்க்கமாக தியோகர் நகருக்குச் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அவரை வரவேற்றனர். காரின் கதவை திறந்து, நின்றபடியே வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன், தியோகர்-கொல்கத்தா இடையேயான இன்டிகோ விமானத்தின் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஆபரேஷன் தியேட்டர் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், 16,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
தியோகர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என வலியுறுத்தினார். குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை பிரதமர் மோடி குறுக்கு வழி அரசியல் என விமர்சித்தார்.
ஜார்கண்ட் மட்டும் இன்றி இந்த திட்டங்கள் மூலம் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயனளிக்க முடியும் என கூறினார். தியோகர் விமான நிலையம் தங்களின் நீண்ட கால கனவு எனவும், அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்,
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications