For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காக்கைகள் திடீர்னு வெள்ளையா மாறுது- கண்ணு தெரியாம போகுது- செத்து செத்து விழுது- அஸ்ஸாமில் 'ஷாக்’

அஸ்ஸாமில் காக்கைகள் நிறம் மாறிய நிலையில் திடீரென கொத்து கொத்தாக செத்து விழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காக்கைகள் திடீர்னு வெள்ளையா மாறுது-செத்து செத்து விழுது- அஸ்ஸாமில் ஷாக் வீடியோ

    குவஹாத்தி: அஸ்ஸாமில் காக்கைகள் திடீரென வெள்ளை நிறமாக மாறுவதும் சிறிது நேரத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக செத்து விழுவதும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அஸ்ஸாம் மாநிலத்தின் ஜதிங்கா என்ற இடத்துக்கு வந்து சேரும் பறவைகள் மர்மமான முறையில் கொத்து கொத்தாக செத்து விழுகின்றன. இது பறவைகளின் தற்கொலை பிரதேசமாக கூறப்படுகிறது.

    ஜதிங்கா ஆய்வு

    ஜதிங்கா ஆய்வு

    ஜதிங்காவில் மட்டுமே பறவைகள் செத்து விழுவதற்கான காரணம் குறித்து இன்னமும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அஸ்ஸாமில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    கருப்பு டூ வெள்ளை

    கருப்பு டூ வெள்ளை

    சோனிட்பூர் மாவட்டம் போர்பாகியா கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் காகங்களின் கருப்பு நிறம் திடீரென மாறியிருக்கிறது. கருப்பு நிறம் ஆங்காங்கே வெள்ளை நிறமாகிக் கொண்டே இருந்திருக்கிறது.

    கண்பார்வை பறிப்பு

    கண்பார்வை பறிப்பு

    இந்த நிறம் மாறிய நிலையில் காக்கைகளால் அதனைத் தொடர்ந்து பறக்க முடியாமல் போயிருக்கிறது. இதற்கு காரணம் நிறம் மாற மாற கண்பார்வையும் பறிபோயுள்ளது. இந்த நிறமாற்றம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே காக்கைகள் கொத்து கொத்தாக செத்து விழுந்திருக்கின்றன.

    ஆய்வு நடைபெறுகிறது

    ஆய்வு நடைபெறுகிறது

    தற்போது இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. இந்த விநோத மரணங்களுக்கு காரணம் வைரஸ் தாக்குதலாக இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    English summary
    In Assam dozen crows have died after changing their colour. Veterinarians visited the place and collected samples for investigation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X