குரூர பாகிஸ்தானின் சோலி முடிஞ்சது.. சிந்து நதியில் இருந்து நீர் திறப்பது அதிரடியாக நிறுத்தம்!
டெல்லி: சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவதை மத்திய அரசு இன்று முதல் அதிரடியாக நிறுத்திவிட்டது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இன்று நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல் படுகொலை செய்ததற்கு பதில் நடவடிக்கையாக சிந்து நதிநீர் திறப்பை நிறுத்திவிட்டது மத்திய அரசு.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிந்து நதிப் படுகையில் ஒரு கால்வாய் வெட்டப்பட்டு தென் பஞ்சாப் பகுதியின் விவசாயத்தை உயிர்ப்பித்தது. நாடுகள் பிரிவினைக்குப் பின்னர் இந்த பகுதி, பாகிஸ்தானுக்கு சென்றது. ஆனால் இந்த பகுதியில் நீர்தேவைக்காக நமது இந்தியாவைத்தான் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இதனால் சிந்து நதிநீர் பகிர்வுக்காக 1947-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதேநேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டதால் சிந்து நதிக்கான நீரை திறப்பதை இந்தியா திடீரென நிறுத்தியது. பாகிஸ்தானின் 17 லட்சம் ஏக்கர் நிலம் இதனால் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டது. அமைதிப் பேச்சுகளின் பின்னர் மீண்டும் சிந்து நதிநீரை திறந்துவிட்டது இந்தியா.
இதன் பின்னர் 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரவி, பியாஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டன. ஜீலம் செனாப் நதிகளின் 80% நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னரும் சிந்து நதிநீர் பங்கீடு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா உருவாக்கிய நீர்மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த பின்னணியில்தான் தற்போது, சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறப்பதை நமது நாடு இன்று முதல் நிறுத்திவிட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது, இதனடிப்படையில் இன்று முதல் சிந்து நதிநீர் திறப்பையும் இந்தியா நிறுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications