சிஎஸ்கேவுக்கு எமனாக மாறும் சுப்மன் கில்? ஒருவேளை இருக்குமோ? மழைக்கும், அவருக்கான ராசிய பாருங்க! ஆஹா
அகமதாபாத்: ஐபிஎல் 2023 சீசன் பைனலில் இன்று சென்னை-குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் சென்னை அணிக்கு சுப்மன் கில் தான் சிம்ம சொப்பணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் அவருக்கும், மழைக்கு இடையேயான தொடர்பு பற்றிய புதிய விஷயம் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களை பயத்தில் உறைய வைத்துள்ளது.
2023 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பைனல் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நேற்று பைனல் நடக்க இருந்த நிலையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.
அதோடு பைனல் என்பதால் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ‛ரிசர்வே டே' என்ற முறையில் இன்று சென்னை-குஜராத் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆண்டு குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த முறையும் வாகைசூடி கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல் டோனி தலைமையிலான சென்னை அணியும் 5வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் திட்டத்துடன் களமிறங்க உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சுவாரசியத்துக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
சென்னை அணியை பொறுத்தமட்டில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் தான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளார். இதுவரை சுப்மன் கில் இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 851 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். இதனால் இன்று நடக்கும் பைனலிலும் சுப்மன் கில் தான் சென்னை அணிக்கு சிம்ம சொப்பணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த சீசனில் லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக கில் 58 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அதன்பிறகு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் நின்று அந்த அணியின் பிளேஆப் கனவை தகர்த்தார். அதன்பிறகு பிளேஆப்-பில் எலிமினேட்டர் 2ல் மும்பை அணிக்கு எதிராக 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்து தனது அணியை பைனலுக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் தான் இன்றைய பைனலில் சுப்மன் கில் தான் சென்னை அணிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது அவரது ரன் குவிக்கும் திறன் தான். குறிப்பாக அவர் ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு எதிரான போட்டிகளில் அடித்த சதங்கள் என்பது அகமதாபாத் மைதானத்தில் இருந்து வந்தது தான். இதனால் தான் சுப்மன் கில்லுக்கு அகமதாபாத் ராசியான மைதானமாக பார்க்கப்படுகிறது. இன்றைய பைனல் போட்டியும் இந்த மைதானத்தில் தான் நடக்கிறது என்பது அவர் நிச்சயம் சென்னை அணிக்கு கடும் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது.
இதுதவிர மழைக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு உள்ளது. அதாவது போட்டிக்கு முன்பு மழை வந்தால் சுப்மன் கில் சதம் விளாசுகிறார். ஐபிஎல் சீசன் கடைசி லீக் போட்டியான பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கீட்ட நிலையில் அதில் சுப்மன் கில் சதம் விளாசினார். அதன்பிறகு பிளேஆப் எலிமினேட்டர் 2ல் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் மழை குறுக்கீட்டது. அதிலும் கில் சதம் விளாசினார். இதனால் நாளை பைனலில் மழை குறுக்கீட்டு உள்ளதால் சுப்மன் கில் சதமடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்டு தான் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டு இருந்தது. அதில், ‛‛கடைசி லீக் மேட்ச் நடந்தபோது மழை பெய்தது. இதில் சுப்மன் கில் 100 விளாசினார். அதன்பிறகு 2வது குவாலிபையர் மேட்சில் மழை குறுக்கீட்டது. அதிலும் சுப்மன் கில் சதம் அடித்தார். இப்போது பைனலில் மழை பொழிகிறது எனக்கூறி வெற்றியின் அடையாளமாக இரண்டு விரலை காட்டி சுப்மன் கில் சதம் அடிப்பார்'' என தெரிவித்துள்ளது.
இருப்பினும் கூட சுப்மன் கில்லுக்கும், மழைக்கும் இடையேயான நெருக்கமான தொடர்பு பைனலில் ‛வொர்க்அவுட்' ஆகுமா? இல்லாவிட்டால் டோனியின் வியூகத்தால் சிஎஸ்கே அணியின் பவுலர்கள் கில்லின் விக்கெட்டை உடனே கபளீகரம் செய்வாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications