ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு வைக்க பீட்டாவின் கிரிமினல்தனம்.. பெங்களூர் ‘கியூப்பா’வை ஏவியது!
விலங்கு நலன் பாதுகாப்பு அமைப்பாக கூறிக் கொண்டு கியுப்பா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. பீட்டாவிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பதால் கியுப்பா என்ற பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்
டெல்லி: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கியுப்பா என்ற விலங்கின அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. பீட்டா அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருப்பதால் கியுப்பா என்ற வேறொரு விலங்கின அமைப்பின் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்காமலேயே பொங்கல் திருவிழா கழிந்தது. அதனால் இந்த ஆண்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் மாணவர்கள் புரட்சி போராட்டத்தை நடத்தினார்கள். இதன் விளைவாய் தமிழக அரசு முதலில் அவசர சட்டம் கொண்டு வந்தது. பின்னர் நிரந்த சட்டத்துக்காக தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இதனையும் எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு முதலில் பீட்டா சார்பாக தாக்கல் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கியுப்பா என்ற அமைப்பே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கியுப்பா என்ற இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பீட்டா அமைப்பிற்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் கியுப்பா அமைப்பின் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீட்டா அமைப்பைப் போன்றே கியுப்பா அமைப்பும் விலங்குகள் தொடர்பாக செயல்பட்டு வருகிறதாம். எந்தப் பெயரிலாவது வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தி விடலாம் என்று மூர்க்கத்தனமாக செயல்பட்டு வரும் பீட்டாவை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கப் மாட்டார்கள். பீட்டாவாக இருந்தாலும் சரி கியுப்பாவாக இருந்தாலும் சரி தமிழகத்திற்கு இடம் இல்லை என்று உறுதியாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications