400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத மத்திய பிரதேச கிராமம்... கடவுளின் சாபம் என மக்கள் நம்பிக்கை
மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை. அவ்வாறு நடந்தால் குழந்தையோ அல்லது தாயோ மரணமடைவர் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
ராஜ்கார் மாவட்டத்தில் உள்ளது சங்கா ஷியாம் ஜி கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாக கூறப்படுகிறது.

இறப்பு நேரிடும்
இந்த வினோதமான நடைமுறை குறித்து அந்த ஊர் பெரியவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கடந்த 400 ஆண்டுகளாக எங்கள் ஊரில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்த்தால் குழந்தை ஊனமாகமோ அல்லது குழந்தை அல்லது தாய் இறப்போ நேரிடும் என்பது எங்கள் நம்பிக்கை.

குழந்தைகள் இறப்பு
16-ஆவது நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில் ஒரு கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. அப்போது ஒரு பெண் கோதுமை அரைத்தது அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்த கடவுள் சாபமிட்டதாகவும் அது முதல் அங்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

அவசர காலங்களில்
பிரசவம் பார்க்க வேண்டுமானால் கிராம எல்லையில் வைத்து பார்ப்போம். இல்லாவிட்டால் இதற்கென ஒரு தனி அறை கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 90 சதவீத பிரசவம் மருத்துவமனைகளில் நடந்து விடும் அவசர காலங்களில் மட்டும் கிராம எல்லைக்கு வெளியே பார்க்கப்படும்.

வாய்மொழி
கடவுள் சாபம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. எனினும் எங்கள் மூதாதையர்கள் வாய்மொழியாக சொன்னதுகேற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று அந்த ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications