காசிக்குப் போனா.. மறக்காம 'நமோ ரொட்டி' வாங்கிச் சாப்பிடுங்க!
வாரணாசி: நமோ .. இந்தப் பெயரை இன்னும் இந்தியாவுக்கு மட்டும்தான் சூட்டவில்லை பாஜகவினர். மற்றபடி குடிநீர் முதல் சாப்பிடும் சாப்பாடு வரை சகலத்திற்கும் சரமாரியாக இந்தப் பெயரை சூட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நமோ ரொட்டி பாப்புலராகியுள்ளது.
பாஜகவினர் செய்யத் தவறினாலும் கூட வர்த்தக நோக்கில் பலரும் கூட நரேந்திர மோடி பெயரையும், ராகுல் காந்தி பெயரையும் பயன்படுத்தி கல்லாவை நிரப்பி வருகின்றனர்.
நமோ டீ, நமோ மெடிக்கல் ஷாப், நமோ மருந்துகள் வரிசையில் தற்போது நமோ ரொட்டி வந்து விட்டது. அதுவும் அவர் போட்டியிடும வாரணாசியில் நமோ ரொட்டி பாப்புலராகியுள்ளது.

தாபா கடைகளில் நமோ ரொட்டி
வாரணாசியில் மோடி போட்டியிடுவதையடுத்து அத்தொகுதியில் உள்ள பல தாபா கடைகளில் நமோ ரொட்டி என்ற பெயரில் ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் நரேந்திர மோடியின் பெயரையே ரொட்டியில் பொறித்து விடுகிறார்கள்.

ஆப் கி பார்.. மோடி சர்க்கார்
அதாவது அந்த ரொட்டியில் பாஜகவின் முழக்கமான ஆப் கி பார்.. மோடி சர்க்கார் என்ற வாசகத்தை பொறித்துள்ளனர். இந்த ரொட்டியைத்தான் பல தாபாக்களில் வாடிக்கையாளர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கிறார்கள்.

செம விற்பனையாம்
இந்த நமோ ரொட்டிக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். பலரும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதால் விற்பனை சூடாக உள்ளதாக தாபாக்காரர்கள் கூறுகிறார்கள்.

குறுகிய காலத்தில் நிறைந்த லாபம்
இந்த ரொட்டியை தேர்தல் முடிவு தெரியும் வரை மட்டுமே விற்க முடியும் என்பதால் அதுவரைக்கும் முடிந்தவரை நிறைய லாபம் பார்க்க ஆசையாக உள்ளனராம் தாபா கடைக்காரர்கள்.

சரி நமோ பெயரில் உள்ள வேறு பொருட்கள் என்ன..
நமோ டீ, நமோ தொப்பி, நமோ கப், நமோ டட்டூ, நமோ டி சர்ட், நமோ பட்டாசுகள், நமோ சோப்புகள்.. இப்படி நிறைய உலா வருகிறது.
சரி நமோ ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளத் தரப்படும் சால்னாவுக்கு என்ன பெயர் வச்சுருக்காங்கன்னு தெரியலையே...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications