பைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து
காந்திநகர்: பைபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி பைபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக மாறி, மிக தீவிர புயலாக மாறியது.

இதைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறிய நிலையில் நேற்று முன் தினம் சூப்பர் புயலாக மாறியது. இது வரும் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. பைபர்ஜாய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ஆம் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி- பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயல் காரணமாக 67 ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. குஜராத் மேற்கு ரயில்வே பிராந்தியத்தில் 67 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அரபிக் கடல் ஆக்ரோஷமாக இருப்பதாக வரும் 14 ஆம் தேதி வரை தைத்தல் கடற்கரைக்கு யாரும் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது குஜராத் சௌராஷ்ட்ரா , கச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு திசை காற்று மட்டும் வெப்ப சலனம் காரணமாக வரும் 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக வலுவிழந்தே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த புயலால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என சொல்லப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications