ஹூட்ஹூட் புயல்: ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டினம்: ஹூட்ஹூட் புயல் குறித்த விவரங்களை அறிய ஹெல்ப்லைன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதி பயங்கர புயலான ஹூட்ஹூட் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியது.

புயல் தாக்கியபோது விசாகப்பட்டினத்தில் மணிக்கு 180கிமீ வேகத்தில் காற்று வீசியது. ஹூட்ஹூட் புயலால் விசாகப்பட்டினத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் புயல் குறித்த விவரங்களை அறிய ஹெல்ப்லைன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு,
உள்துறை அமைச்சகம், டெல்லி- 011-23093563, 011- 23093566, ஒடிஸா- 1948, ஆந்திரா- 1949


Click it and Unblock the Notifications
