பாய்லின் புயல்... மனிதர்கள் தப்ப மரணித்துப் போயின விருந்தினராய் வந்த சைபீரிய பறவைகள்
ஸ்ரீகாகுளம்: பாய்லின் புயலின் கோரத்தாண்டவத்துக்கு முன்பே மனிதர்கள் காப்பாற்றப்பட்டு பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுவிட்டது....ஆனால் புயலின் போதும் புயலுக்கும் பின்னும் விருந்தினர்களாய் வந்த ஆயிரக்கணக்கான சைபீரிய பறவைகள் பலியாகிப் போனது ஸ்ரீகாகுளம்வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வங்கக் கடலில் மிகப் பெரும் புயலாக உருவெடுத்துவிட்டது பாய்லின் புயல் என்று அறிவிக்கப்பட்டு 10 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாகவே அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். இதனால் பெருமளவு மனித உயிர்கள் பலியாவதை தடுத்துவிட்டதை பெருமையாகப் பேசிவருகிறோம்..

ஆனால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான மைல்தொலைவில் இருந்து ஆண்டுதோறும் வந்து தங்கி முட்டையிட்டு குஞ்சுகளுடன் தாயகம் திரும்பும் சைபீரிய பறவைகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து போயுள்ளன.
சைபீரியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் பல்லாயிரக்கணக்கான சைபீரிய பறவைகள் ஸ்ரீகாகுளம் பகுதிக்கு வருகை தரும். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளியமரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சும் பொரித்து டிசம்பர் மாதம் குஞ்சுகளுடன் தாயகம் நோக்கி பறந்து செல்லும்...
ஆனால் இந்த ஆண்டு சைபீரிய பறவைகளின் வாழ்க்கையை பாய்லின் புயல் சூறாவாளியாய் சுருட்டிப் போட்டுவிட்டது. புயலின் போதும் புயலுக்குப் பின்னரும் போதுமான இரை கிடைக்காமல் கடந்த நான்கைந்து நாட்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து போய்விட்டன. குஞ்சுகளை பாதுகாத்து வைத்திருந்த மரங்கள் வேரோடு வீழ்ந்து போய்விட்டன.
இந்த கோரத்தாண்டவத்தில் சிக்கி தத்தளித்த சுமார் 200 பறவைகளை வனத்துறையினர் மீட்டு மாற்று உணவுகளை வைட்டமின் மருந்து கலந்து கொடுத்து பாதுகாத்து வருகின்றனர். தங்களது விருந்தினர்களாய் வந்து தங்களது மண்ணிலேயே சைபீரிய பறவைகள் மடிந்து போனது ஸ்ரீகாகுளம் விவசாயிகளை பெரும் சோகத்தில் மூழ்க வைத்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications