சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம்.. மோடிக்கு கடிதம் எழுதிய ரத்தன் டாடா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சைரஸ் மிஸ்திரியை பதவி நீக்கம் செய்தது பற்றி பிரதமர் மோடிக்கு டாடா குழும இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள ரத்தன் டாடா கடிதம் எழுதி உள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவன தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டு டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இக்கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் குழு ஈடுபட்டுள்ளது என்றும், டாடா குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து விடக்கூடாது என்பும் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இருப்பினும், சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டதற்கான உரிய விளக்கம் ஏதும் கடிதத்தில் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications