'சங்கராபரணம்' கே. விஸ்வநாத்துக்கு தாதா சாகிப் பால்கே விருது !
பிரபல இயக்குனரும், நடிகருமான காசிநாதுனி விஸ்வநாத்துக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் காசிநாதுனி விஸ்வநாத்துக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகரும், இயக்குனரும் ஆவார் கே.விஸ்வநாத். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார் கே.விஸ்வநாத், தமிழில் உத்தமவில்லன், யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய சங்கராபரணம் படத்திற்காக 1980 ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய விருது வழங்கி கவுரவித்தது. கே.விஸ்வநாதனுக்கு 1992 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு தாத சாகிப் பால்கே விருது காசிநாதுனி விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications