Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாக்கை நீட்டி, நாய்க் காதை ஆட்டி... மகளுடன் லூட்டி அடிக்கும் டோணி... நீங்களும் பாருங்களேன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியும், அவரது மகள் ஜிவாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் வர வர செம காமெடியாக போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அடர்த்தியான தாடியுடன் மகளை தூக்கி வைத்துக் கொண்டு போஸ் கொடுத்து கலக்கிய டோணி இப்போது ஒரு காமெடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டோணியின் செல்ல மகள் ஜிவா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மகளுடன்தான் செலவிடுகிறாராம் டோணி. கிரிக்கெட் விளையாடப் போகும் சமயங்களில் தனது தாயாருடன் லூட்டி அடிக்கும் ஜிவா, அப்பா வந்து விட்டால் அவர் பக்கம் தாவி விடுவார்.

சமீபத்தில் அடர்ந்த தாடியுடன் தனது மகளுடன் போஸ் கொடுத்து அதை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் டோணி. அந்தவகையில் தற்போது ஒரு நகைச்சுவை வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

நாய் லுக்கில்...

நாய் லுக்கில்...

இந்த வீடியோவில் டோணியும், அவரது மகளும் காமெடியாக காணப்படுகின்றனர். பெரிய நாக்கு, பெரிய மூக்கு, கண்ணை மறைக்கும் முகமூடி என நாய் லுக்கில் காணப்படுகின்றனர் இருவரும்.

புதிய வீடியோ...

புதிய வீடியோ...

நாக்கை வேகமாக நீட்டி நீட்டி காமெடி செய்கிறார் டோணி. அதைப் பார்த்து ஜிவாவும் செய்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோவை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் டோணி.

ஓய்வில் டோணி...

ஓய்வில் டோணி...

தற்போது டோணி ஓய்வில் இருக்கிறார். எனவே தனது மகளுடன் ஜாலியாகப் பொழுதைக் கழித்து வருவதாக தெரிகிறது. கடந்த மாதம்தான் ஜிம்பாப்வே நாட்டுக்கு டோணி தலைமையிலான இந்திய அணி போயிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

வெளிநாட்டு டூர்...

முன்பு ஒருமுறை டோணி கூறுகையில், ‘நான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் போய் விடுவதால் எனது மகளுக்கே கூட என்னை அடையாளம் தெரியவில்லை' என்று கூறியிருந்தார். ஆனால் ‘அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளுடன் இருந்து அதை சரி செய்து விடுவேன்' என்றும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+