ஜாக்பாட் இல்லை! கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி.. விசாரணைக்கு அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆகியுள்ளதை அடுத்து அவருக்கு சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். இவர் வேறு ஒருவரின் நிலத்தில் கூலித் தொழிலாளியாவார். இவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவருடைய வங்கிக் கணக்கும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதுகுறித்து அறிவிப்பை சைபர் செல் துறையினர் வீட்டு வாசலில் ஒட்டியுள்ளனர். அப்போதுதான் தனது வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆகியுள்ளது நசிருல்லாவுக்கு தெரியவந்தது.
வங்கிக் கணக்கில் திடீரென ரூ 100 கோடி பணம் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணைக்காக வரும் 30 ஆம் தேதிக்குள் ஆஜராகும்படி நசிருல்லாவுக்கு சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து நசிருல்லா கூறுகையில் காவல் துறையினரிடம் இருந்து விசாரணைக்காக அழைப்பு வந்துள்ளது.
எனக்கு தூக்கமே வரவில்லை. எந்த தவறும் செய்யாத நான் ஏன் விசாரணைக்கு போக வேண்டும். எனக்கு எதுவும் தெரியவில்லை. எனது வங்கிக் கணக்கில் ரூ 100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மையா என நான் பல முறை சோதனை செய்கிறேன். இதுகுறித்து உண்மையை அறிய வங்கிக் கணக்கு பாஸ் புக்குடன் வங்கி கணக்கு முடக்கப்படுவதற்கு முன் சென்றேன்.
அப்போது அந்த கணக்கில் வெறும் ரூ 17 இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் எப்படித்தான் ரூ 100 கோடி வந்தது என்றே தெரியவில்லை. கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது என்றார் நசிருல்லா.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications