டெல்லி அருகே தலித் குடும்பத்தினரை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்குதல்? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
டெல்லி: டெல்லி அருகே தலித் குடும்பத்தினரை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை அடுத்த நொய்டா அருகே கவுதம புத்த நகரில் நிகழ்ந்த சம்பவம் என கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் ஒரு ஆண், பெண் நிர்வாணமாக ஆவேசமாக பொதுமக்கள், போலீசார் முன்னிலையில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதும் அவர்களை போலீசார் இழுத்து செல்வதுமான காட்சி இடம்பெற்றுள்ளது.
தலித் தம்பதியினர் தாங்கள் கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்தை தட்டிக் கேட்டனர்; இதனால் அவர்களை போலீசாரே நிர்வாணப்படுத்தி அடித்து தாக்கி இருக்கின்றனர் என்ற வாசகங்களுடன் இந்த வீடியோ பரவிக் கொண்டிருக்கிறது. இச்சம்பவத்துக்கு கடுமையான கண்டனக் குரல்களும் எழுந்து வருகிறது.
அதே நேரத்தில், தாங்கள் கொடுத்த புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததால் தம்பதிகள் தாமாகவே ஆடைகளை களைந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர் என்றும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநில போலீசாரோ, கவுதம புத்த நகர் சம்பவம் ஜோடிக்கப்பட்டது. அந்த வீடியோவில் உள்ள இருவரும் வேண்டுமென்றே அரங்கேற்றிய சம்பவம் அது என தெரிவித்துள்ளனர்.
தாத்ரியை தொடர்ந்து நொய்டாவா?
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications