குஜராத்தில் தலித் பெண்ணை கடத்தி கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர்
ராஜ்கோட்: குஜராத்தில் தலித் பெண் ஒருவர் 3 பேரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமான ராஜ்கோட்டில் உள்ள மார்பி ரோடு பகுதி அருகே தலித் பெண் ஒருவர் தனது மைத்துனருடன் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவர்களை வழிமறித்து அந்த பெண்ணின் மைத்துனரை தாக்கிவிட்டு அவரை அருகில் உள்ள ஒரு ஆளில்லாத வீட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் அந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண் நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை நேற்று மாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்றாவது நபரை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 3 குற்றவாளிகளில் ஒருவன் அதே பகுதியைச் சேர்ந்தவன் என்றும், அவனது சகோதரரின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெருக்கமானவர் என்றும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications