கேரளாவில் பயங்கரம்: தலித் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை
கொச்சி: கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த சட்டம் படித்து வந்த 30 வயது தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கப்பட்ட நிர்பயா போன்று கேரளாவிலும் ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(30). தலித் சமூகத்தை சேர்ந்த அவர் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 28ம் தேதி வெளியே சென்ற அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து ஜிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜிஷாவின் உடலில் 30 இடங்களில் வெட்டு இருந்தது. மேலும் அவரது குடல் உருவப்பட்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முழு விபரம் தெரிய வரும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்குமாறு கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications