மத்திய பிரதேசத்தில் தொடரும் கொடூரம்... மேலும் ஒரு தலித் பெண்ணின் மூக்கறுப்பு
மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு தலித் பெண்ணின் மூக்கை அறுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தன் வீட்டில் பணிபுரியும் தலித் பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது,
கடந்த திங்கட்கிழமையன்று நரேந்திரசிங்கும், 32, அவரது அப்பா சாகப் சிங்கும் தலித் பெண்ணின் கணவரை அடித்தனர். அவர்கள் கூறிய வேலையை செய்ய மறுத்த காரணத்தால் அடித்து துவைத்துள்ளனர். காயமடைந்த கணவரை மருத்துவமனையில் அனுமதிக்க எடுத்துச்சென்றார்.

அப்போது அந்த பெண்ணையும் அடித்து தாக்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணின் மூக்கை அவர்கள் அறுத்ததாக தெரிகிறது. கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவம் வியாழக்கிழமையன்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த பெண்ணின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பின்பே நடந்த சம்பவத்தை கூற முடியும் என்று இன்ஸ்பெக்டர் பஜ்ரி கூறியுள்ளார்.
இது குறித்து மத்தியபிரதேச மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடூர சம்பவம் பற்றி மகளிர் ஆணைய தலைவர் லதா வாண்கடே விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுகளில் பணிபுரியும் தம்பதியரை அடித்து காயப்படுத்தியதோடு, பெண்ணின் மூக்கை அறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டம் நரோட்டம்பூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது. ரந்தீர் என்பவருக்குச் சொந்தமான வயலில் தலித் பெண் ஒருவர் கால்நடைக்கு புல் அறுத்துள்ளார். அப்போது நில உரிமையாளர் ரந்தீரும் அவரது மகனும் வந்தனர். தலித் பெண் நுழைந்ததால் தனது நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி அப் பெண் வைத்திருந்த அரிவாளை வாங்கி அவருடைய மூக்கை நில உரிமையாளர் அறுத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications