தாவூத்தின் பாஸ்போர்ட் நம்பர், முகவரி எல்லாம் கொடுத்தாச்சு- இதை விட என்ன வேண்டும் பாகிஸ்தானுக்கு?
டெல்லி: G866537 இதுதான் தாவூத் இப்ராகிமின் பாஸ்போர்ட் எண். இந்த பாஸ்போர்ட்டானது, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் A1332945 என்ற பெயரில் மேலும் ஒரு பாஸ்போர்ட்டையும் அவர் வைத்துள்ளார். இது கராச்சியிலிருந்து பெறப்பட்டுள்ளது.
இரண்டு பாஸ்போர்ட்டையும் ஷேக் அப்துல் என்ற பெயரில் தாவூத் இப்ராகிம் வாங்கியுள்ளார். இந்தத் தகவல் இன்டர்போல் போலீஸுக்கும் தரப்பட்டுள்ளது. இன்டர்போல் போலீஸாரும், இதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்குத் தகவல் கொடுத்து அவரைக் கண்காணிக்குமாறும் கூறியுள்ளனர்.

ஆனால் இன்றோ, தாவூத் இப்ராகிம் தனது நாட்டிலேயே இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் இன்டர்போல் கூறியதை காதிலேயே வாங்காத பாகிஸ்தான் அரசு எப்படி தாவூத் தனது நாட்டில் இல்லை என்று கூறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறுகையில், அப்போதைய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவரிடம் தாவூத் இப்ராகிம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது முஷாரப், தனக்கு அதுகுறித்துத் தெரியாது என்று கூறியிருந்தார். அப்போது இன்டர்போல் தகவல் குறித்து சுட்டிக் காட்டி கேட்டபோது, அதுகுறித்து கவனிப்பதாக முஷாரப் கூறினார் என்று அத்வானி கூறியிருந்தார்.
அதன் பின்னர் பலமுறை தாவூத் இருப்பிடம் குறித்து இந்தியா பலமுறை பாகிஸ்தானுக்குத் தகவல் அனுப்பியது. அவனது நடமாட்டம் குறித்தும் தகவல் அனுப்பியது. ஆனால் அதை பாகிஸ்தான் அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக தாவூத்தை பாதுகாக்கும் முயற்சியேலேயே ஈடுபட்டு வருகிறது.
இந்த தகவல்கள் போக, துபாயில் ஒரு சொத்தை வாங்குவது தொடர்பாக தாவூத்துக்கும், மற்றவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் விவரத்தையும் கூட இந்தியா கொடுத்துள்ளது. அதையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.
இந்தியா தனக்குக் கிடைத்தத் தகவல்களை தவறாமல் இன்டர்போலுடன் பகிர்ந்து வருகிறது. ஏமன் மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் இருந்தபடி பாகிஸ்தானில் தாவூத் பாஸ்போர்ட்டைப் பெற்றதாக தகவல்கள் உள்ளன.
ஐக்கிய அரபு நாட்டிலிரந்து தாவூத் பெற்ற பாஸ்போர்ட்டின் எண் A717288 ஆகும். ஏமானிலிருந்து பெற்ற பாஸ்போர்ட்டின் எண் F823692 ஆகும். தாவூத்தின் பயண விவரம் தொடர்பான தகவல்கள் கூட இன்டர்போலிடம் உள்ளது. ஏமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்ற விவரம் இவை.
மேலும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தங்கியுள்ள இடங்களின் முகவரிகளையும் கூட இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்குக் கொடுத்துள்ளது. இவற்றை இந்திய உளவுப் பிரிவினர் சேகரித்துக் கொடுத்துள்லனர்.
முதல் முகவரி இது - மர்கல்லா சாலை, எப் 6/2 தெரு எண் 22, வீட்டு எண் 29, கராச்சி. 2வது முகவரி - கராச்சி, கிளிப்டன், அப்துல்லா ஷா காஸி தர்கா அருகே, 2வது மாடி, மோயின் பேலஸ்.
இந்தியா கொடுத்த அனைத்து ஆதாரங்களையும் வைத்து இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸையும் வெளியிட்டது.
3 முறை இப்படி நோட்டீஸ் விடப்பட்டது. ஆனாலும் பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. அதேசமயம், நாட்டை விட்டு வெளியறிச் செல்ல பலமுறை அது அனுமதித்தது. அதாவத சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications