எங்களுக்கு இன்றுதான் தீபாவளி: அரவிந்த் கெஜ்ரிவால் ஊர் மக்கள் உற்சாகம்
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதை அவரது சொந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகைப் போல உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. புதிதாக தொடங்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் 28 இடங்களை கைப்பற்றியது. 15 ஆண்டு கால காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்த வெற்றியை கெஜ்ரிவாலின் சொந்த கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தீபாவளி கொண்டாட்டம் போல இது இருந்தது.
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி அவரது சொந்த ஊராகும். அவரது உறவினர்களும், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், டிரம் அடித்தும் வெற்றியை கொண்டாடினார்கள். காதை பிளக்கும் அளவுக்கு உற்சாமாகமும் கொண்டாட்டம் இருந்தது. பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் இந்த கொண்டாட்டத்தினை ஒளிபரப்பின.
அப்போது அவர்கள், கெஜ்ரிவால் எங்கள் தலைவர், அவர் மக்களுக்கானத் தலைவர் என்று முழக்கமிட்டனர். பின்னர் பட்டாசு குப்பையை அவர்களின் சின்னமான துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்தனர்.
இந்த கொண்டாட்டங்களைப் பற்றி பேசிய ஆம் ஆத்மி தொண்டர் மனோஜ் கூறும்போது, "இன்று எங்களுக்கு தீபாவளியாகும். சாதாரணமான எங்கள் தலைவர் அரசியலில் பெரும் தலைவர்களை தோற்கடித்து இருக்கிறார்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications