'கள்ள காதலி'யுடன் வாழ்வதற்காக 'இறந்ததாக' நாடகம்.. ஆம் ஆத்மி பிரமுகர் 'உயிரோடு' சிக்கினார்!
பெங்களூர்: கள்ளக் காதலியுடன் வாழ்வதற்காக இறந்து விட்டது போன்று நாடகமாடி தலைமறைவாக வாழ்ந்து வந்த ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சந்திர மோகன் ஷர்மாவை பெங்களூருவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலராக இருந்தவர் சந்திர மோகன் ஷர்மா. இவர் 3 மாதங்களுக்கு முன்பு டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் காருடன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் இறந்துவிட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் சந்திர மோகன் ஷர்மா உயிரிழக்கவில்லை என்றும், பெங்களூரு, நேபாளத்தில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களை அவரது செல்போன் மூலம் திரட்டிய மனைவி, இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நேபாளம் மற்றும் பெங்களூருவுக்கு இரண்டு தனிப்படை போலீசார் விரைந்தன. அப்போது, பெங்களூருவில் அவர் வேறொரு பெண்ணுடன் வசித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நொய்டா அழைத்து சென்றனர், இறந்துவிட்டதாக ஏமாற்றியதாகவும், காரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் குறித்தும் புதிய வழக்குகளை சந்திர மோகன் ஷ்ர்மா மீது போலீசார் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications