For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீதியை கிளப்பும் விமான விபத்துகளும், அதிகரிக்கும் பாதுகாப்பும்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 2014ம் ஆண்டில் விமான விபத்துகளில் 1, 183 பேர் பலியாகியுள்ளபோதிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

2014ம் ஆண்டில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது, அதே நிறுவன விமானம் உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது, ஏர் ஏசியா விமானம் இந்தோனேசியா கடலில் விழுந்தது என்று நடந்த விபத்துகளில் 1,183 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தனை விபத்துகள் நடந்த போதிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

2001

2001

1995ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை பல விமான விபத்துகள் நடந்துள்ளன. இருப்பினும் 2001ம் ஆண்டில் தான் விமான விபத்தில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 57 பேர் பலியானார்கள். அமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி கட்டிடத்தில் மோதியது தான் பலி எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும்.

2005

2005

2001ம் ஆண்டுக்கு பிறகு 2005ம் ஆண்டில் தான் அதிகபட்சமாக 1, 361 பேர் விமான விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

பலி

பலி

2005ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை நடந்த விமான விபத்துகளில் 9 ஆயிரத்து 208 பேர் பலியாகினர். முன்னதாக 1995ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை விமான விபத்துகளில் 20 ஆயிரத்து 688 பேர் பலியாகியுள்ளனர்.

காரணம்

காரணம்

விமான விபத்துகளுக்கு பெரும்பாலும் விமானிகள் செய்யும் தவறுகள், மேசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன.

English summary
Though 2014 was a deadly year when it comes to flight accidents, safety has reportedly increased than before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X