'மத்திய அரசிடம் தூக்கு கைதிகளின் கருணை மனுக்கள் குறித்து தெளிவான புள்ளி விவரம் இல்லை'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசிடம் ஜனாதிபதிகள் பரிசீலித்த தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் தெளிவான புள்ளிவிவரம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் நாடு விடுதலை அடைந்தது முதல் இதுவரை 5,106 கருணை மனுக்கள் ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டதாகவும் ஆய்வறிக்கை ஒன்றின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதம் தவிர்த்த இதர குற்றங்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய சட்ட கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட இந்தியாவில் மரண தண்டனை என்பது தொடரவே செய்யும்.

Death sentence in India: Presidential panel on mercy petitions sought

இந்நிலையில் இந்திய சட்ட கமிஷனின் முன்னாள் தலைவர் ஏ.பி. ஷா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சத்யபிரதா பால் உள்ளிட்டோர் டெல்லியில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையில் 1947ஆம் ஆண்டு முதல் 5.8.2015ஆம் ஆண்டு வரை மொத்தம் 5,106 கருணை மனுக்கள் ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. மேலும் இதில் 69% அதாவது 3,534 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இருப்பினும் 1,572 மனுக்கள் (31%) பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2012ஆம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவியேற்றது மொதல் மொத்தம் 34 தூக்கு தண்டனை கைதிகளின் 28 கருணை மனுக்களை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி வரை பரிசீலித்திருக்கிறார்.

இந்த 28-ல் 11 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவில் மரண தண்டனையை படிப்படியாக குறைப்பதற்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் 10 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது. கருணை மனுக்கள் தொடர்பான தெளிவான புள்ளி விவரம் மத்திய அரசிடம் கிடையாது.

2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, 1950 முதல் 2009ஆம் ஆண்டு வரை மொத்தம் 300 கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. ஆனால் 2006ஆம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதியன்று ராஜ்யசபாவில், 1965ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையில் 1,261 கருணை மனுக்களை ஜனாதிபதி பரிசீலித்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1947ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை மட்டுமே 3,796 கருணை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் ஒருசில புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கருணை மனுக்கள் பரிசீலனை தொடர்பாக மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் பல வழிகாட்டுதல்களை பிறப்பித்திருக்கும் போதும் ஒருதெளிவற்ற நிலையே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+