சியாச்சன் மலைச் சிகரம் முதல் தென் சீனக் கடல் வரை.. யோகா செய்த இந்திய ராணுவ, கடற்படை வீரர்கள்
டெல்லி: பனிச் சிகரமான சியாச்சன் முதல் தென் சீனக் கடல் வரை உலகின் பல பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ, கடற்படை வீரர்கள் இன்று சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்று யோகா செய்தனர்.
இந்தியக் கடற்படையினர் போர்க் கப்பல்களில் யோகாசனம் செய்து அனைவரையும் கவர்ந்தனர். உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என வர்ணிக்கப்படும் சியாச்சின் பனிச் சிகரத்திலும் இந்திய ராணுவத்தினர் யோகா செய்து உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக், விமானப்படைத் தலைமைத் தளபதி அரூப் ரஹா, கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே.தோவன் ஆகியோர் ராஜ்பா்தில் நடந்த பிரதமர் தலைமையிலான யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீரட்டில் நடந்த நிகழ்ச்சியில் யோகா செய்தார்.
சியாச்சின் மலைச் சிகரமானது பூமியிலிருந்து 18,800 அடி உயரத்தில் உள்ளது. அங்கு சிறப்பு உடை அணிந்து ராணுவத்தினர் யோகா செய்தனர்.
காலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் ஆகும். இதேபோல கார்கில், லடாக் போன்ற பகுதிகளிலும் ராணுவத்தினர் யோகா செய்தனர்.
தென் சீனக் கடலில் நிலை கொண்டுள்ள இந்தியக் கடற்படையினர் தங்களது கப்பல்களிலேயே யோகா செய்தனர்.
தென் சீனக் கடல் பிராந்தியத்தில் ஐஎன்எஸ் ரன்வீர், சத்புரா, கமோர்தா, சக்தி ஆகிய கப்பல்கள் உள்ளன. அதில் உள்ள இந்திய வீரர்கள் கப்பல்களின் மேல்தளத்தில் யோகா செய்தனர்.
மேலும் இந்திய விமானப்படையும், யோகா தினத்தைக் கொண்டாடியது. பல விமானப்படைத் தளங்களில் விமானப்படை வீரர்களும், குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 191 நாடுகளில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ராஜ்பாத்தில் நடந்த யோகாசன பயிற்சி கின்னஸ் சாதனை படைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications