டெல்லி: 6 மணிநேரம் தாமதமான ஏர் இந்தியா விமானம்… பயணிகள் அவதி
டெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் 6 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு ஏஐ-101 விமானம் நேற்றிரவு நியூயார்க் புறப்பட தயாரானது. பயணிகள் விமானத்தில் ஏற தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் விமானிக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவரால் 16 மணிநேரம் விமானத்தை ஓட்டக்கூடிய தகுதியில்லை என்று தெரியவந்தது
இதனையடுத்து விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. வேறு விமானிக்கு தகவல் தெரிவித்து அவர் வந்த பின்பு காலை 6.35 மணிக்கு நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டது.
விமான தாமதத்திற்கு காரணம் பற்றி பயணிகளுக்கு எந்த வித தெளிவான தகவலும் ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட வில்லை என்பதால் 6 மணிநேரம் காத்திருந்து அவதிக்கு ஆளாகினர் பயணிகள். தாமதமான 6 மணிநேரமும் பயணிகள் விடிய விடிய கண்விழித்து காத்திருந்து சோர்வுடன் கிளம்பி விமானத்திற்குள் சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications