இப்படி செய்யுங்கள்.. ஆட்சியை பிடிக்க இதுதான் ஒரே வழி.. ஸ்டாலினுக்கு சைலண்டாக பாடம் எடுத்த கெஜ்ரிவால்

பலமான பாஜக கட்சியை வீழ்த்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை நோக்கி முன்னேறியதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: பலமான பாஜக கட்சியை வீழ்த்தி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை நோக்கி முன்னேறியதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. கெஜ்ரிவாலின் இந்த வெற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 44 இடங்களில் முன்னிலை, பாஜக 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது

    டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறதுஇதனால் டெல்லி முதல்வராக மீண்டும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க இருக்கிறார். .

    கொஞ்சம் இந்துத்துவா

    கொஞ்சம் இந்துத்துவா

    கெஜ்ரிவாலின் இந்த வெற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த தேர்தல் பிரச்சாரம் முழுக்க அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்துவா அரசியலை தாக்கி பேசவில்லை. மாறாக கொஞ்சம் இந்துத்துவாவிற்கு சார்பாக பேசினார். மறைமுகமாக தனக்கும் இந்துத்துவா கொள்கை இருக்கிறது என்று காட்டிக்கொண்டார். நாங்களும் இந்துக்களை மதிக்கிறோம். அதே சமயம் இஸ்லாமியர்களையும் மதிக்கிறோம். இதனால் பாஜகவை விட நாங்கள் கொஞ்சம் மேல் என்று ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்தது.

    ஆட்டம் கண்டது

    ஆட்டம் கண்டது

    ஆம் ஆத்மி கட்சியின் இந்த மிதவாத இந்துத்துவா அரசியல் போக்கு பாஜகவை பெரிய அளவில் ஆட்டம் காண வைத்தது. ஆம் ஆத்மி இந்த தேர்தலில் முன் வைத்த ஒரே அரசியல் இதுதான். இஸ்லாமியர்களுக்கு ஆதரவு. இந்துக்களுக்கும் ஆதரவு. நாங்கள் நடுநிலை என்ற முகம், இதுதான் ஆம் ஆத்மி. மிக முக்கியமாக இந்து மதத்தை நாங்கள் மதிப்போம். அவர்களின் பாரம்பரியங்களை நாங்களும் மதிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி சொல்லாமல் சொல்லியது.

    சிஏஏ எதிர்ப்பு

    சிஏஏ எதிர்ப்பு

    சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திலும் ஆம் ஆத்மி இதே நிலைப்பாட்டைதான் கடைபிடித்தது. மொத்தமாக ஆம் ஆத்மி சிஏஏ போராட்டத்தை ஆதரிக்கவில்லை, அதை எதிர்க்கவும் இல்லை. ஜேஎன்யூ பக்கம் கூட ஆம் ஆத்மி தலைவர்கள் செல்லவில்லை. பாஜகவின் வலையில் விழ கூடாது. ஜேஎன்யூ உள்ளே சென்றால், நமக்கு வேறு முத்திரை குத்தி விடுவார்கள் என்று ஆம் ஆத்மி கவனமாக இருந்தது. அது தற்போது கை மேல் பலனாக அந்த கட்சிக்கு கூடி வந்துள்ளது.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    ஆக மொத்தம் ஆம் ஆத்மியின் இந்துத்துவா சார்பு அரசியல் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்திலும் இதே அரசியலை திமுக முன்னெடுக்க தொடங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். ஆம் இந்துக்களுக்கு ஆதரவான அரசியல் போக்கை திமுக கடந்த சில வாரங்களாக முன்னெடுத்து வருகிறது. உதாரணமாக தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்று திமுக தமிழர்களை ஒன்றிணைத்தது. அதேபோல் பழனி காவிடி குறித்து டிஆர்பி ராஜா உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் டிவிட் செய்து வருவது.

     என்ன ஆன்மீகம்

    என்ன ஆன்மீகம்

    மிக முக்கியமாக பெரியார் இந்துக்களுக்கு எதிரி இல்லை. இந்துத்துவாவிற்குத்தான் எதிரி என்று திமுக நிறுவ முயல்வது என்று பல விஷயங்களை திமுக செய்து வருகிறது. கனிமொழி வரை இதை வெளிப்படையாக பேச தொடங்கி உள்ளனர். இதெல்லாம் பார்க்கும் போது, திமுக கெஜ்ரிவாலின் அரசியல் ஸ்டைலுக்கு தயார் ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். பாஜகவின் மொத்த அரசியலும் இந்துத்துவா என்று அஸ்திவாரத்தில்தான் கட்டுப்பட்டது. அதை அரவிந்த் கெரிவால் அசைத்து பார்த்துள்ளார்.

    ஸ்டாலின் இதை

    ஸ்டாலின் இதை

    அதை தற்போது ஸ்டாலின் செய்ய தொடங்கி உள்ளார். ஸ்டாலின் மனைவி தினம் தினம் கோவிலுக்கு செல்வதும் இப்படிப்பட்ட சென்டிமென்ட்தான் என்கிறார்கள். ஸ்டாலின் அனுமதியுடன்தான் இது நடக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஆன்மீக நம்பிக்கை கொண்ட இந்துக்களின் வாக்குகளை கவரும் டெக்னீக்தான் இது. கெஜ்ரிவால் இதே டெக்னீக்கைதான் டெல்லியில் பயன்படுத்தினார். பாஜக இதற்கு எப்படி கவுண்டர் கொடுப்பது என்று தெரியாமல் முழிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக வீழவும், சிவசேனாவின் இந்துத்துவா அரசியலே காரணம்.

    ஆனால் தமிழகம்

    ஆனால் தமிழகம்

    அதாவது பாஜக தான் எடுத்த ஆயுதத்தால் தானே வீழும் நிலைக்கு சென்றுள்ளது. இதை மட்டும் திமுக சரியாக பயன்படுத்திக் கொண்டால், அரவிந்த் கெஜ்ரிவால் போல் அதிரடியாக செயல்பட்டால் கண்டிப்பாக 2021 கோட்டையில் ஸ்டாலின்தான். டெல்லி ஸ்டைலை எடுத்து கொஞ்சம் தமிழ்நாட்டு உப்பை தூவி , கெஜ்ரிவால் வழியில் சென்றால் திமுக வெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+