டெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றார். கெஜ்ரிவாலுடன் 6 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
கடந்த வாரம் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது அக்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இன்று நடைப்பெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், கெஜ்ரிவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெஹ்லாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்.
Feb 16, 2020, 12:42 pm IST
டெல்லியின் மகனாக பதவியேற்றுள்ளேன்- அரவிந்த் கெஜ்ரிவால்
Feb 16, 2020, 12:42 pm IST
டெல்லியின் மகன் முதல்வராக பதவியேற்றுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை -கெஜ்ரிவால்
Feb 16, 2020, 12:42 pm IST
டெல்லி தேர்தல் வெற்றி என்னுடைய வெற்றி அல்ல- கெஜ்ரிவால்
Feb 16, 2020, 12:42 pm IST
ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு டெல்லிவாசிகளின் வெற்றியாகும் -கெஜ்ரிவால்
Feb 16, 2020, 12:41 pm IST
கடந்த 5 ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதே எங்கள் பிரதான முயற்சியாகும் -கெஜ்ரிவால்
Feb 16, 2020, 12:41 pm IST
டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் -கெஜ்ரிவால்