டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ததுடன் ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும என்று ஆளுநருக்கு கடிதம் எழுதினர். இதற்கு மறுத்துவிட்ட ஆளுநர் நஜீப் ஜங் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்தார்.
இதனயைடுத்து டெல்லி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்துவது குறித்த ஆளுநரின் பரிந்துரை ஆலாசிக்கப்பட்டது.
பின்னர் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஜனாதிபதியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது..












Click it and Unblock the Notifications