டெல்லி சட்டசபை தேர்தல்: 24 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு 2013ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். ஆனால் கெஜ்ரிவால் 48 நாட்களில் பதவி விலகினார்.
இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் அவ்வப்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வந்தது.
இதனால் டெல்லியில் சட்டசபையைக் கலைத்துவிட்டு புதிதாக தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆளுநரின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் விமர்சித்தது.
பின்னர் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆட்சி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க விரும்பவில்லை என தெரிவித்துவிட்டன.
இதனால் டெல்லி அரசை கலைக்க ஜனாதிபதி தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கடிதம் அனுப்பினார். இதை ஏற்று ஜனாதிபதியும் நவம்பர் மாதம் டெல்லி சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டார்.
தற்போது டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி 24 வேட்பாளர்களைக் கொண்ட முதலாவது பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த 24 பேருமே 2013ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications